வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குவது குறித்து இன்று நடக்கும் கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும், கட்டுப்பாடுகளுடன ஊரடங்கு நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், இறுதித் தீர்மானம் இன்று நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் கொவிட் தடுப்புச் செயலணியின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனிடையே நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என இலங்கை விசேட வைத்திய நிபுணர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
.இலங்கை கொவிட் பரவலில் சிவப்பு வலயத்தில் உள்ளதாகவும், இதன் தாக்கம் குறையும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் குறித்த சங்கம் கோரியுள்ளது.