இரத்தினபுரி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கொள்ளை சம்பவம்!

0
205

இரத்தினபுரி மாவட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டு சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இதன்போது ஆலயத்தின் கருவறைக்குள் வீற்றிருக்கும் அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 10 பவுனுக்கு மேற்பட்ட பிரமாணத்தை உடைய தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, ஆலய நிர்வாக சபையினர் இவ்விடயம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளிடம் தெரிவித்ததற்கு அமைய, அவர் அக்கணமே சம்பவ இடத்திற்கு வருகை தந்து இவ்விடயம் குறித்து இரத்தினபுரி பிரதி பொலிஸ் மா அதிபர் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த திருட்டுச் சம்பவத்திற்கு தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய அழுத்தங்களை கொடுப்பதாக ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here