தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நிராகரித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைகளில் நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமையால், தனக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து தனது விளக்கத்தை அளிக்கவுள்ளதாகவும் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.