இஷாலினி மரணம் : ரிஷாட் பதியூதீன் மனைவி, மாமா ஆகியோருக்கு பிணை

0
247

இஷாலினி மரணம் குறித்த வழக்கு விசாரணைகளில் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் மாமா ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த இஷாலினியின் மரணம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர், இஷாலினியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியூதீனின் மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் தந்தை ஆகியோருக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சாட்சியங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கு பல முறை பிணையில் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இஷாலினியின் பிரேத பரிசோதனையில் சந்தேக ஏற்பட்ட நிலையில், புதைக்கப்பட்ட இஷாலினியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாகவும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அத்துடன், இஷாலினியின் உடற்கூறுகள் இரசாயனப் பகுப்பாய்வு பிரிவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here