சைமா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்துக்கு 7 விருதுகள்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை சுதா கொங்கரா
இயக்கியிருந்தார்.

இந்நிலையில் சைமா விருதுகள் வழங்கும் விழாவில் 7 விருதுகளை அள்ளியுள்ளது இந்த திரைப்படம். சைமா 2021 விழாவில், சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த இயக்குனர் விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த திரைப்பட விருது தயாரிப்பாளர் ராஜசேகரன் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது நிகேத் பொம்மிரெட்டிக்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் கிடைத்துள்ளது.