நாடு தற்போது ஒருமாத காலத்திற்கு மேலாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் தீவிர நிலையை எட்டியுள்ளமையே இதற்கு காரணம்.எனவே நாட்டை மீள திறப்பது நம் கைகளிலே தங்கியுள்ளதென மன்றாசியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்தமாதம் 20ம் திகதியிலிருந்து அக்டோபர் முதலாம் திகதிவரை நாட்டை மூடுவதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எட்டப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாது இடையிடையே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டாலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு காலத்தை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல தோட்டங்களில் கொரோனா தொற்றுக்கெதிரான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாமல் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளமை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.நுவரெலியா மாவட்டத்தை கொரோனாவிலிருந்து மீட்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆனால் ஒருசிலர் தடுப்பூசிகளை ஊதாசீனம் செய்வது கவலையான விடயமே.
மதுபானசாலைகள் திறந்தவுடன் கூட்டம் கூட்டமாக மதுபானசாலை சாலைகளுக்கு செல்பவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள பின்வாங்குவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.எனவே நாட்டை எவ்வித பிரச்சனையும் இன்றி சுமூகமான நிலையில் நாட்டை திறப்பது மக்களாகிய நம் கைகளிலேயே உள்ளது.எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்