ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

மெல்போர்ன் நகரம் உட்பட அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் புதன்கிழமை காலை 6.0 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 09:15 மணியளவில் விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்டில் நிகழ்ந்தது.

நிலநடுக்கம் மாநிலத்தின் தலைநகரான மெல்போர்னில் இருந்து 130 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவான காட்சிகள் சில கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்ததைக் வெளிக்காட்டியது. ஆனால் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகியவற்றிலும் உணரப்பட்டது.