பாதையை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி. சாரதியின் நிலை கவலைக்கிடம்.

0
201

மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில், சாரதி படுகாயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலை ஆபத்தானதாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பண்டாரவளை – வெள்ளவாயா பிரதான பாதையில் எல்ல என்ற இடத்தில் நேற்று இரவு ( 21-09-2021) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையிலிருந்து மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லொறி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் டிப்பர் லொரி உதவியாளர் பாய்ந்து தப்பியுள்ளார். சாரதி படுகாயமுற்றார்.

சுமார் இரு மணித்தியாலயங்களாக மேற்கொள்ளப்பட்ட பாரிய பிரயத்தனங்களின் பின்னர் இறுகிய நிலையிலிருந்த சாரதி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றார். இவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்ல பொலிசார்,இவ் விபத்து குறித்து ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here