உங்கள் பெயர் B என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா? உங்களது குணம் அப்போ இப்படியாக தான் இருக்குமாம்!

0
134

B என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட நபர்கள் எப்படிப்பட்ட கல்வி, தொழில், காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆளுமைத் திறன் எப்படி இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

​​பொதுவான குணம்

இவர்கள் மிகவும் ஆளுமைத் திறன் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எதையும் எளிதாகவும், கவனமாகவும் கையாளக்கூடிய இவர்கள், மோசமான, கோபமான சூழ்நிலையில் கூட அமைதியாக இருக்க விரும்புவார்கள்.The letter B in gold Stock Photo by ©zentilia 8292937

மன கஷ்டமான நேரங்கள், மோசமான சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் தங்களின் கவனத்தை திசை திருப்பி வேறு வேலையில் ஈடுபடுவார்கள்.

காதல்

காதல் இவர்களுக்கு தோன்றுவது சிரமம் தான் என்றாலும், இவர்களுக்கும் காதலிக்கக்கூடியவர்களின் பட்டியலில் இடம் உண்டு எனலாம். ஆக்கப்பூர்வமான நபர்களாகவும், அன்பைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய, அழகான கருத்துக்களைக் கொண்டவர்கள்

காதலிக்கும் போது தான் காதலிப்பவரைச் சுற்றுலா, திரைப்படம், ஊர் சுற்றுதல் போன்ற விஷயங்களை செய்வார்கள். அவர்களுக்கு தேவையானது காதலிப்பவரின் ஒப்புதல் மட்டுமே.

இவர்கள் பெரிய அளவில் வாக்குவாதங்கள், கருத்து மோதல்களில் ஈடுபட மாட்டார்கள். அதனால் இவர்கள் காதலில் எப்போதும் மகிழ்ச்சியும், இன்பமும், காதலும் நிரம்பி இருக்கும்.

உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்

B என்ற எழுத்தில் பெயர் தொடங்கக்கூடிய நபர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மற்றவர்களால் இவர்களை விரைவில் புரிந்து கொள்ள முடியாது. அதனால் இவர்கள் மனதளவில் அதிகம் காயமடைவார்கள்.

தங்களின் மோசமான தருணங்களில் தங்களின் நண்பர்கள், பிடித்த குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள்.

ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள்

தொண்டு உள்ளம் கொண்ட இவர்கள், தான, தர்மங்கள் மீது ஆர்வம் காட்டுவார்கள். நன்கொடை வழங்குவார்கள்.

சமூகத்தை அதிகம் நேசிப்பார்கள்

நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இருப்பினும் சிலர் மட்டுமே நெருக்கமாக இருப்பார்கள். விழாக்கள், பார்ட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவார்கள்.

தன் குடும்பம் மட்டுமல்லாமல், தன் வீட்டை சுற்றி, தன் பணியாற்றும் இடம் என சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இவர்கள் சமூகத்தை அதிகம் நேசிப்பார்கள். சமூகத்தில் இவர்கள் மீது மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.

​தைரியம் மிகுந்தவர்

எந்த ஒரு விஷயம் குறித்தும் பெரியளவில் பயம் இல்லாதவர்கள். பயம் என்ற வார்த்தை அறியாதவர்கள் எனலாம். பயப்பட வேண்டிய தருணங்களில் அமைதியாக, பொறுமையாக இருந்து சமாளிப்பார்கள்.

ஒருவரை காப்பாற்ற அழைக்கும் போது ஒரு கனம் கூட தாமதிக்க மாட்டார்கள். உணர்ச்சிகரமான இவர்கள், மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது.

இவர்கள் அதிக தைரியம் நிறைந்தவர்கள். வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் சென்றால் பெரியளவில் மகிழ்ச்சியும், முன்னேற்றத்தையும் பெற்றிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here