நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தரப்பினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பில் முறையான மற்றும் நம்பகத்தன்மையான விசாரணையொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் , அரசியல் அல்லது மத சார்ந்த விடயங்களுக்காக அல்ல எனவும் போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.