07 விக்கெட்டுக்களால் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இண்டியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக குயிண்டன் டி கொக் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் லோக்கி பெர்கியூஸன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, 156 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ராகுல் திரிபாதி 74 ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மும்பை இண்டியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரிட் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.