எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே இதை தெரிவித்தார்.
சினோபார்ம் தடுப்பூசி (sinopharm vaccine in sri lanka ) செலுத்திக் கொண்ட இளம் வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.