பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்காக கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இணைந்து தொழிநுட்ப குழு ஒன்றை ஸ்தாபித்துள்ள நிலையில் இந்த குழுவினால் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமைய, பாடசாலைகள் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ​நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்

12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதனால், கொவிட் பரவல் குறைவடைந்த பின்னர் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களை கொண்ட 3,884 பாடசாலைகளை முதல் கட்டமாக ஆரம்பிக்க உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல், தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு இரு வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனையடுத்து மாவட்ட, பிரதேச மட்டத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடிய சாதகமான நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க உள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இன்றைய பாடசாலை செய்திகள் – முக்கிய அறிவிப்பு
இதன்பின்னர், கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பெற்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.