டெல்லி கெப்பிட்டல்ஸ் மீணடும் முதலிடம். ராஜஸ்தான் ரோயல் 33 ஓட்டங்களால் தோல்வி.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 36ஆவது போட்டி அபுதாபியில் இன்று இடம்பெற்றது. ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான இப்போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ஷ்ரேயாஸ் ஐயர் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் 155 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக சஞ்சு சாம்சன் 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அன்ரிச் நோர்ட்ஜ் 18 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.