ஒரு கோடி ரூபா செலவில் கொரோனா சிகிச்சை பிரிவு இன்று முதல் ஆரம்பம்.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான ரூபா செலவில் பிரத்தியேகமாக நிர்மானிக்கப்பட்ட கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தரிந்த வீரசிங்க அவர்களின் தலைமையில் சர்வமா வழிபாடுகளுக்கு மத்தியில் இன்று (27) திகதி காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஹட்டன் டிக்கோயா, பொகவந்தலா, நோர்வூட், மஸ்கெலியா, வட்டவளை , கொட்டகலை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் போது பெரும்பாலானவர்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையினையே நாடினர் இதனால் இங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.

இதனை சமாளிப்பதற்காக வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் அரசார்பற்ற நிறுவனங்கள் , வர்த்தகர்கள், செலவந்தர்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் குறித்த கொரோனா சிகிச்சை பிரிவு கட்டிடம் சகல வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டது.
குறித்த கட்டடம் கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்ட போதிலும் குறித்த கட்டடத்திற்கு கொரோனா நோயாளர்கள் மாற்றப்படவில்லை. இந்நிலையில் இன்று குறித்த கட்டடம் பௌத்தம் , இந்து, இஸ்லாம், கிறிஸ்த்தவம் ஆகிய சமய வழிபாடுகளை தொடர்ந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த சிகிச்சை பிரிவு திறந்து ஆரம்பித்ததன் மூலம். 30 கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் வைத்தியசாலையின் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்