ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலன் கருதி சொந்த நிதியிலாவது சேவையாற்றுவோம்.

கடந்த காலங்களில் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்காக பல வேலைகளை செய்தோம் இன்றும் நாம் ஆட்சியில் இல்லை ஆகவே ஆட்சியில் இருந்தாலும் இல்லவிட்டாலும் மக்களின் நலன் கருதி சொந்த நிதியிலாவுது சேவைகளை செய்வோம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சிறுவர்கள் மற்றும் சிசுக்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பெறுமதிமிக்க ஒரு தொகை நவீன இலத்திரனியல் உபகரணங்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு தனது சொந்த நிதியில் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தரிந்த வீரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

நுவரெலியா மாவட்டத்தில் பெரிய வைத்தியசாலை இருந்தாலும் கூட கிளங்கன் பகுதியில் உள்ள வைத்தியசாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றால் அம்பகமுவ கொட்டகலை பொகவந்தலாவை மஸ்கெலியா டயகம உள்ளிட்ட மிகப்பெரிய பிரதேசங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் இந்த வைத்தியசாலையில் கடந்த காலங்களில் அளப்பரிய சேவைகளை செய்திருக்கிறது பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன.

போதுமான அளவு இடவசதிகள் இல்லை தாதியர்கள் பற்றாக்குறை போதியளவு ஆளனியில்லை வைத்திய உபகரணங்கள் இல்லை இவ்வாறு பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் இந்த தேவைகளை முடிந்த அளவு பூர்த்தி செய்ய நாம் ஆட்சியில் இருக்கும் போது நடிவடிக்கை எடுத்திருந்தோம் தற்போதும் நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட எம்மால் முடிந்தளவு செய்துவருகிறோம்.

மஸ்கெலியா வைத்தியசாலை தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன இந்த வைத்தியசாலையுடன் இணைந்து உறவு பாலமாக இந்த வைத்தியசாலை செயப்பட வேண்டும். அந்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட உடன் தனிப்பட்ட ரீதியில் நான் உதவிகளை செய்யவுள்ளேன். இந்த வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக இருந்தாலும் மாவட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்ப மாத்திரமின்றி இதனை தரயர்த்வதற்கு தேவையான நடவடிக்கைளையும் நாங்கள் எதிர்காலத்தில் செய்வோம் இனிவரும் காலங்களில் சுகாதார துறை ஒரு சவால் மிக்க துறையாக அமையும் ஏனென்றால் விஞ்ஞானமும் தொழிநுட்பமும் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய நோய்களும் அதிகரிக்கும் ஆகவே இந்த வைத்தியசாலையின் வளச்சி இன்றியமையாததது என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி தரிந்த வீரசிங்க உதவி வைத்திய அதிகாரி ஜே.அருள்குமரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ ஸ்ரீதரன் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்.