மாணவர்களின் கல்வியினை விருத்தி செய்ய அரசாங்கம் 1250 டெப்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அதிகஸ்ட்ட பிரதேச மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் கல்வியினை ஒன்லையின் மூலம் பெற்றுக்கொடுத்து ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் ஹட்டன் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் சிங்கள 22 பாடசாலைகளுக்கு 1250 டெப்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

குறித்த டெப்கள் வழங்கும் நிகழ்வு ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பானர் பி.ஸ்ரீதரன் தலைமையில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர் வள நிலையத்தில் இன்று (28) ம் திகதி நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட 22 பாடசாலைகளுக்கு டெப்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு டெப்கள் வழங்கி வைக்கப்பட்ட பாடசாலைகளில் வைபை தொழிநுட்பம் மற்றும் பைபர் தொழிநுட்பங்களை பயன்படுத்தி இணைய வழி கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஸ்ரீ லங்கா டெலிகொம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் இணைய வழி கல்வியினை மேம்படுத்த ஒரு சில ஆசிரியர்களுக்கும் இதன் போது டெப்கள் பெற்றுக்கொடுக்கப்பட்;டமையும் குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம்