பூண்டுலோயாவில் வேரோடு மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடொன்று முற்றாக சேதம்.

0
188

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்ப்பிரிவு தோட்டத்தில் மரமொன்று வேரோடு முறிந்து சாய்ந்ததில் அருகிலிருந்த வீடொன்று முற்றாக சேதத்துக்குள்ளாகியுள்ளது.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட திடீர் காற்றால் 28/09/2021 காலை 9 மணியளவில் இவ்வாறு மரம் வேரோடு சாய்ந்து வீடு முற்றாக சேதமாகியுள்ளதோடு வீட்டிலிருந்த பொருட்களும் சேதமாகியுள்ளன.

மேலும் இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததையடுத்து மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here