சிறுத்தைக்கு பலியான நாய்!

மலையக தோட்டபுர பகுதிகளில் அதிகமான சிறுத்தைகளில் நடமாற்றம் உள்ளதாக பொதுமக்கள் அடிக்கடி அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர் இருப்பினும் தோட்ட குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாற்றத்தை தடுக்கமுடியாத நிலைமைே காணப்படுகின்றது.

நேற்றைய தினம் லிந்துலை டிலிகூல்ட்ரி தோட்டத்தில் சிறுத்தை நாய் ஒன்றை இரண்டு துண்டுகளாக கடித்து துண்டாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

தோட்ட குடியிருப்பு பகுதியில் இருந்த வீட்டு வளர்ப்பு நாய் ஒன்றை இவ்வாரு துண்டாக்கியுள்ளதாக நாயின் உரிமையாளர் தெரிவித்தார்

இரவு வேலையில் தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை கடித்து கொல்லும் நிலைக்கு வந்துள்ளதாகவும் இரவு வேலையில் வெளியில் வரும் மனிதர்களையும் தாக்க முயற்சிப்பதாகவும் இதனால் தாம் அச்சத்துடன் வாழ்வதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

தோட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாற்றத்தை குறைக்கும் வகையில் சிறுத்தைகளை பிடித்து செல்லும் நடவடிக்கைகளை வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றார்கள்

பாலேந்திரன்