தாய்லாந்தை தாக்கிய சூறாவளி; இதுவரை 7 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தை டியான்மு சூறாவளி தாக்கிய நிலையில் பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் கனமழை பெய்து வந்த நிலையில் டியான்மு சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகளவு பெய்த கனமழையால் வீடுகள் மூழ்கிய நிலையில் மக்கள் மேல் கூரைகலில் தஞ்சமடைந்துள்ளனர்.

கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.