முடங்கிய மலையக நகரங்கள் 42 நாட்களுக்கு பின் புத்துயிர் பெற்றன.

0
174

தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்ட காரணமாக கடந்த 42 நாட்களாக முடங்கிய மலையக நகரங்கள் இன்று (01) திகதி தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டதனை தொடர்ந்து புத்துயிர் பெற்றிருந்தன.

மகாணங்களுக்கு கிடையிலான தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததன் காரணமாக அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் ,செல்லும் ஊழியர்கள் மற்றும் அத்தியவசிய தேவைக்காக பயணிப்போர் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவதனை காணக்கூடியதாக இருந்தன.

 

மலையக நகரங்களில் சகல வர்ரத்த நிலையங்களும் தனிமைப்படுத்தும் சட்டவிதிகளை பின் பற்றி சுகாதார நெறிமுறைகளுக்கமைய வர்த்தக நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தன. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொழில் இழந்திருந்து வாகன சாரதிகள் ,ஆட்டோ சாரதிகள்,மற்றும் அதிஸ்ட்ட சீட்டு விற்பனையாளர்கள்,ஹோட்டல்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இன்று கடமைக்கு திரும்பியிருந்தன.

ஆலயங்களில் மற்றும் மதஸ்த்தானங்களில் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சமய வழிபாடுகளிலும் நடைபெற்றன. ஆலய பூஜைகளில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்களே இன்று ஆலயங்களில் அனுமதிக்கப்பட்டன.


இதே நேரம் பொது மக்கள் அத்தியசிய உணவு பொருட்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக மலையக நகரங்களை நோக்கி சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசமணிந்து வருகை தந்திருந்தனர்.

பொது போக்குவரத்து பஸ்களிலும் ஆசனங்களுக்கு மாத்திரமே பயணிகள் ஏற்றிச்சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here