இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் VGP நிறுவனத்தின் தலைவர் V.G.சந்தோஷம் அவர்களை சந்தித்து, தமிழ் கலாச்சாரம்,திருக்குறள் புத்தங்கள் மற்றும் அதன் நற்கருத்துக்களை இலங்கையில் மேலும் பரப்புவதற்கு அவர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
திருக்குறளின் நற்கருத்துக்களை பரப்புவும், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவது தொடர்பாகவும் இதன்போது இருதரப்பினரும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.