டெல்லியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது யொஹானிக்கு விபத்து

0
161

டெல்லியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இலங்கையின் இளம் பாடகர் யொஹானி டி சில்வாவுக்கு விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

டெல்லி இசை நிகழ்ச்சியின் போது கிட்டார் இசைக் கருவி முகத்தில் இடித்ததில் யொஹானியின் இடது கண் புருவம் காயமடைந்துள்ளது.

இந்தியாவில் யொஹானியின் நேரடி இசை நிகழ்ச்சிகளும் நேர்காணல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த விபத்து அடுத்த நிகழ்ச்சியைப் பாதிக்காது என்று யொஹானி தெரிவித்துள்ளார்.

யொஹானியின் அடுத்த இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நாளை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here