பாடசாலை மாணவர்களின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள ‘விதியின் விளையாட்டு’ குறும்படம்.

0
206

நீலமேகம் பிரசாந்த்

கொரோனா எனும் கொடிய நோயை மையப்படுத்தி அதிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கான ஓர் விழிப்புணர்வு குறும்படமாக விதியின் விளையாட்டு எனும் குறும்படம் வெளிவந்து மலையகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவன் துலக்ஷன் இயக்கத்தில் இக்குறும்படம் வெளியாகியுள்ளது.

இக் குறும்படத்தில் தினுஷன் (தரம் 11, ஹைலண்ட்ஸ் கல்லூரி ), அனோஜன் (தரம் 13, ஸ்டோனிகிலிப் கல்லூரி), பிலமோன் ஷேபியன் (தரம் 5, கொட்டகலை தமிழ் மகா வித்யாலயம் ), மதுமிதன் (தரம் 10,கொட்டகலை தமிழ் மகா வித்யாலயம்) என பல பாடசாலைகளை ஒன்றிணைத்து இக்குறும்படம் வெளிவந்துள்ளது.

விதியின் விளையாட்டு எனும் தலைப்புக்கு ஏற்ற வகையில் மிக சிறப்பான கதையை தெரிவு செய்துள்ளனர்.முழு உலகையுமே திக்குமுக்காட வைத்துள்ள கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான விழிப்புணர்வூட்டும் குறும்படமாக விதியின் விளையாட்டு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here