சமைத்து வைத்த உணவில் இருந்த அப்பளம் ஒன்றை 5 வயது மகள் தாயாருக்கு தெரியாமல் சாப்பிட்ட காரணத்தினால் குழந்தையின் வாயில் நெருப்பால் சுட்ட தாய் அக்கராயன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியின் தாத்தா அக்கராயன் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று (09) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற சமயம் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.