பிரதமரை சந்திக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள்.

வேதன முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (12) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன்  ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வேதன முரண்பாடு உள்ளிட்ட விடயங்களுக்குத் தீர்வு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள், 3 மாதகாலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.