நாடு திரும்பினார் யொஹானி டி சில்வா.

‘மெனிக்கே மகே ஹிதே’ பாடல் மூலம் சர்வதேச ரீதியில் பிரபலமான இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா நேற்றிரவு நாடு திரும்பினார்.

இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு சென்றிருந்த அவர், நேற்றிரவு 11.25க்கு இலங்கை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அந்நாட்டு மக்கள் தனக்கு மிகவும் ஆதரவளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்த அவர், இந்திய பிரபலங்கள் பலரையும் சந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி HIRU