மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு??

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளாமல் சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

எரிவாயு விலையை நிலையான விலையொன்றின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.