துபாய் பொருளாதார வாரியத்துடன் கலந்துரையாடல்!

0
88

துபாய் பொருளாதார வாரியத்தின் அழைப்பின் பேரில், இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப்  பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய  பிரதிநிதிகள்   கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துரையாடல் துபாய் பொருளாதார வாரியத்தின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, துபாய் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும்,கொவிட் தொற்று  சூழ்நிலையிலும் துபாய் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல்  இருப்பது குறித்தும்  கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் தலைமை இயக்குனர்  சாமி தீன் அல் காஸ்மி, துபாய் தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக பொறியியல் அதிகாரி  சயிட்  அலவாடி, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் மேலதிக தலைமை இயக்குனர்(ADG) காலித் இப்ராகிம் மற்றும் தலைமை பொருளாதார நிபுணர் டாக்டர் ரயித் சஃபாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது  தற்போதைய துபாய்  பொருளாதார  வளர்ச்சி  வேலைத்திட்டங்கள் குறித்தும் ,  இப்பொருளாதார வாரியத்தால் உருவாக்கப்பட்ட   துபாய் எக்ஸ்போ 2020 பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன் போது பொருளாதார  தலைமை இயக்குனர்,இலங்கை தேயிலைக்கு துபாய் மக்க்ள மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளதாகவும்,துபாய் பொருளாதார சபையில் உள்ள அதிகாரிகள் இலங்கை தேயிலை நல்ல சுவையுடன் இருப்பதாவும், இலங்கை தேயிலையின் தரம் உலக தரம் வாய்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது துபாய் அரசாங்கம் இலங்கையுடன் எதிர்காலத்தில் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க விருப்பத்தை தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here