கிளங்கன் வைத்தியசாலைக்கு ஜீவன் தொண்டமான் விசேட விஜயம்

0
184

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் மூலம் மீள் நிர்மானம் செய்யப்பட்டு இயங்கி வரும் கிளங்கன் வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினூடாக 2 கோடியே 26 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளங்கன் வைத்தியசாலையில் நிலவிவரும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி குறைப்பாடுகள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு விமர்சணங்கள் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையின் குறைப்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் பல முக்கியஸ்தர்களும் வைத்தியசாலைக்கு விசேட விஜயத்தினை மேற்கொண்டு நிலைமைகளை கண்டறிந்தனர்.

இவ்வாறு கண்டறியப்பட்ட அபிவிருத்தி குறைப்பாடுகள் தொடர்பில் விசேட அக்கறை செலுத்திய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வைத்திய சாலையின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி அபிவிருத்திக்கான தேவைப்பாடுகளை கேட்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளையும் அபிவிருத்திக்கான நிதி உதவிகளையும் ஒதுக்கி பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கும் பணித்திருந்தார்.

அந்த வகையில் இந்திய அரசாங்கத்தினால் புதிதாக வழங்கப்பட்ட கட்டிட தொகுதிக்கு உட்கட்டமைப்பு பணிகள், வைத்தியசாலையின் பிரதே அறைக்கு செல்லும் பாதை மற்றும் பாதுகாப்பு வேளி, அதிதிவிர சிகிச்சை பிரிவுக்கான 3 கட்டில்கள், மற்றும் கொரோனா நோயாளர்களுக்காக புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிட தொகுதிக்கான பாதுகாப்பு மதில் சுவர்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 1 கோடியே 46 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மனித வள அபுவிருத்தி நிதியத்தினூடாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இருக்கின்ற 80 இலட்சம் ரூயாய் நிதியினூடாக மிதம் இருக்கின்ற பல்வேறு வேளைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்காப்படவுள்மை குறிப்பிடதக்கது.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here