சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா…?

0
82

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.

சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம். வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.

அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here