இஸ்லாமியர்களுக்கு செந்தில் தொண்டமான் மிலாதுன் நபி வாழ்த்து!

மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, சகோதரத்துவம், நீதி மற்றும் நேர்மை என பல உயர் விழுமியங்களை நபி அவர்கள் தனது போதனைகள் மூலம் முன்வைத்தார்கள்.

இந்தப் போதனைகளுக்கேற்ப தமது வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கு மீலாதுன் நபி விழா முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும்.

இந்த கொவிட் -19 தொற்று சூழ்நிலையில் மீலாதுன் நபிகள் விழாவை வீடுகளிலே அனைவரும் பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும்.

நபிகள் நாயகம் அவர்களின் போதனையை பின்பற்றி வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று கூறி, அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன் நபிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.