இ.தொ.காவோடு என் பயணம் என்றும் மாற்றமில்லை.

0
194

கொட்டக்கலை பிரதேச சபை உபதலைவராக காணப்பட்ட முத்துராமலிங்கம் ஜெயகாந்த் உபத்தலைவர் பதவியிவிலிருந்து பதவி விலகி ஐயாதுரை பாலசுப்ரமணியம் உபத்தலைவராக 21/10/2021 கடமையேற்றுள்ளார்.இந்நிலையில் தான் எவ்வித நிர்பந்தத்திலோ அல்லது கட்டாயத்திலோ பதவி விலகவில்லை எனது முழு விருப்பத்தின் பெயரிலேயே பதவி விலகியுள்ளேன். இரண்டு வருடங்களாக எனக்கு கொடுத்த பொறுப்பை நியாயமான முறையில் செய்துள்ளதாக கொட்டக்கலை முன்னாள் உபத்தலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரதேச சபை தேர்தல் நிறைவடைந்த பிறகு அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஊடாக கொட்டகலை உப தவிசாளராக நியமிக்கப்பட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஈட்டி வருகின்றேன்.என் பயணம் இத்தோடு நின்று விடுவதில்லை இனியும் தொடரும்.

மேலும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் என் சேவைகளை செய்ய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.என்மீது நம்பிக்கை வைத்து பல சேவைகளை மக்களுக்கு வழங்க ஆதரவு வழங்கினார்.இன்றுவரையில் என் சேவைகளை ஆற்றி வருகின்றேன்.
கொட்டகலை உபத்தலைவர் என்ற ரீதியில் இரண்டு வருடங்களாக மக்களுக்கு அர்ப்பணித்து சேவையாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் அனைத்து விடயங்கங்களிலும் எனக்கு உறுதுணையாக விளங்கியுள்ளார்.அதேபோல தம்பியும் கொட்டகலை பிரதேச சபை தலைவருமான ராஜமணி பிரசாந்த் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் பதவியிலிருந்து விலகினாலும் என் பயணம் இ.தொ.காவுடனும், மக்களுடனும் தொடரும் அதில் எவ்வித மாற்றமும் கிடையாது.இப்பதவியை என் முழுமனதுடனும் மக்களுக்கு என் பணியை முழுமையாக ஆற்றியுள்ளேன் என்ற திருப்தியுடனும் உள்ளேன்.அதேபோல புதிதாக உபத்தலைவராக பதவியேற்றுள்ள ஐயாதுரை பாலசுப்ரமணியத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கொட்டகலை முன்னாள் உபத்தலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here