நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு முதல் தடைவையாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய இன்று பல சுகாதார பிரிவுகளில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவில் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசகள் வழங்கும் வேலைத்திட்டம் கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி கே.சுதர்சன் தலைமையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (22) காலை 6.00 மணி தொடக்கம் பகல் 12 வரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.
இதில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கேம்பிரிஜ், யதன்சைட், திம்புல்ல , ஸ்டோனிகிளிப் ஆகிய ஐந்து பாடசாலைகள் 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களில் கல்வி பயிலும் 900 மாணவர்களுக்கும். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் வித்தியாயலம், சுமன சிங்கள மகா வித்தியாலயம், வட்டகொட தமிழ் மகா வித்தியாலயம், கிரேட்வெஸ்ட்டன், பாரதி தமிழ் வித்தியாலயங்களில் கல்வி பயிலும் சுமார் 700 மாணவர்களுக்கும் இன்று தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
குறித்த தடுப்பூசிகள் வழங்கும் போது மாணவர்களுக்கு ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதனை கண்காணிப்பதற்கு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததுடன் மாணவர்கள் மிகவும் ஆர்வதாக தடுப்பூசி பெற்றுக்கொள்வதனை காணக்கூடியதாக இருந்தன.
க.கிஷாந்தன், கே.சுந்தரலிங்கம்