அரசாங்கத்திற்கு எதிரான சில போராட்டங்கள் இப்போது நடைபெற்று வருகின்றன.அந்த போராட்டமானது நாட்டின் தற்போது அதிகரித்துள்ள விலை மக்களின் பொருளாதார சுமை ஆகியன மையப்படுத்தி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர், இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இந்த போராட்டத்தினை செய்து வருகின்றனர்.இந்த போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிராகவும். மற்றுமல்லாமல் தங்களது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் தங்களது இருப்பை கட்டிக்காத்து கொள்வதற்குமே நடைபெற்று வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.
தலவாக்கலையில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .அரசாங்கம் இன்று கொரோனாவினை கட்டுப்படுத்துவற்காக பாரியளவில் நிதியினை செலவு செய்துவருகிறது இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சமூக இடைவெளியும் இல்லாது போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். அந்த போராட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்து கொள்வதில்லை. மக்கள் அவர்களை நிராகரித்து விட்டார்கள்.
வருகின்ற தேர்தல் காலங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக தாங்கள் மக்களிடம் இருக்கின்றோம் என பாசாங்கு காட்டி இப்போது போராட்டத்தினை செய்து வருகின்றனார்கள். ஆனால் மலையக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள் கொரோனா காலத்தில் களத்திலிருந்து சேவை செய்தது யார் என்று கடந்த காலங்களில் நிவாரணப் பொருட்களையும் தடுப்பூசிகளை கௌரவத்திற்குரிய ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்,ராமேஸ்வரன் ஆகியர்கள் பெற்றுக்கொடுத்து செயப்படுத்தி வருகின்றார்கள்.
கொரோனா காலத்தில் காணாமல் போனவர்கள் தற்போது தேர்தல் காலம் வருவதால் ஏதாவது ஒரு துரும்பு சீட்டை எடுத்துக்கொண்டு வலம் வருகிறார்கள்.
இன்று நாட்டின் விலைவாசி பாரிய அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.இன்று அரசாங்க தயாரிப்புக்கான விலைவாசிகளில் உயர்வு குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.அதிகமான அத்தியவசிய மற்றும் ஏனைய பொருட்களும் தனியார் துறையினரேயே சார்ந்துள்ளன. இந்நிலையில் அவர்கள் என்றுமில்லாதவாறு பொருட்களின் விலைகளை அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் உயர்த்தி வருகின்றனர்.அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைகளை நிர்னையிக்கும் போது அவர்கள் பொருட்களை பதுக்கி மக்களை பாரிய சுமையில் தள்ளிவிடுகிறார்கள்.
ஆகவே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் இது அரசாங்கத்தின் செயப்பாடல்ல அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவும்,அரசாங்கத்தினை வீழ்த்துவதற்காகவும் பலர் செயப்படுகின்றனர். அதே போல் ஆசிரியர்கள் போராட்டங்கள் தற்போது வலுப்பெற்றுள்ளன.அவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் கூட இந்த காலத்தில் இந்து போராட்டத்திற்கு உகந்த காலமல்ல எனினும் ஆசிரியர்களின் பிரச்சினையினை இந்த அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.தோட்டத்தொழிலாளர்களை பொருத்த வரையில் இன்று ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மலையகம் முழுவதும் போராட்டங்கள் செய்தார்கள்.அப்போது ஜனாதிபதி அவர்களும் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆகவே தான் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பாரிய பிராயத்தணத்தின் மத்தியில் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த ஆயிரம் ரூபாவினை வழங்காது கம்பனிகள் பல்வேறு நெருக்கடிகளை தொழிலாளர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
இதற்கு சரியான தீர்வினை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும் கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் காரணமாகத்தான் ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முடியாது. போனது என பலர் தெரிவித்து வந்தார்கள். இன்று கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் கம்பனிகள் தங்களது இஸ்ட்டப் படி செயப்பட்டுவருகிறார்கள் ஆகவே இதற்கும் ஒரு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்