நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினைத் தொடர்ந்து பிரதான வீதிகளில் என்றுமில்லாதவாறு பனிமூட்டம் நிலவி வருகிறது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன், வட்டவளை, தியகல, கரோலினா, கடவளை, கினிகத்தேனை, பிட்டவல உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாஓயா, கொட்டகலை, சென்கிளேயர், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பிரதேசங்களிலும் என்றுமில்லாதவாறு பனிமூட்டம் நிலவி வருகின்றது.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் தங்களுடைய வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பனிமூட்டம் நிலவும் வேளையில் தங்களுடைய வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்து தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்துவதன் மூலம் வளைவுகள் நிறைந்த இவ்வீதிகளை விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கே.சுந்தரலிங்கம்



