மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள இலங்கை- பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை

0
193

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் கொவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றுகூடல்கள், நிறுவனங்களில் நடைபெறும் கூட்டங்கள் போன்ற செயற்பாடுகளினால் கொவிட் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு விசேட வைத்தியர் கோரியுள்ளார்.

அத்துடன், பரிந்துரைகள் கிடைத்ததன் பின் சினோபாம் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here