வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) இரவு அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல வென்னொருவ பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது குறித்த யுவதி, அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் தாயும், சகோதரனும் உயிர் தப்பியுள்ள நிலையில், படுகாயமடைந்த யுவதி நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 23 வயது யுவதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த தாதி ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அலவ்வ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.