பெண்களின் கல்விக்காகப் போராடி, நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா திருமணம்.

0
174

பெண்களின் கல்விக்காகப் போராடி, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், இஸ்லாமிய வழக்கப்படி பிரிட்டனிலுள்ள தனது இல்லத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டார்.

தனது திருமண புகைப்படங்களை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (24), பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்.

பெண்களின் கல்விக்கான போராடிய மலாலா மீது, 2012 ஆம் ஆண்டு தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி ரவை மண்டையோட்டுக்கு பாய்ந்ததால் பலத்த காயமடைந்த மலாலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றிருந்தார்.

அதன்போது, சேதமடைந்த அவரது மண்டையோட்டிலிருந்து ஒரு பகுதி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக டைட்டேனியம் தகடு பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிராபத்துக்கு மத்தியிலும் தொடர்ந்தும் பெண் பிள்ளைகளின் கல்விக்காகவவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், 2014 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, 17 வயது சிறுமியாக இருந்த மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

உலகத்திலேயே சிறிய வயதில் நோபல் பரிசுப் பெற்றவர் என்ற பெருமையும் மலாலா பெற்றார்.

தற்போது 24 வயது யுவதியாகவுள்ள மலாலா, பிரிட்டனில் வசித்துவருகிறார். அவர் பிர்மின்ஹாம் நகரில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அசார் என்ற பெயரைத் தவிர தனது கணவர் குறித்து வேறு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இதுகுறித்து மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இன்று எனது வாழ்வின் பொன்னான நாள். அசாரும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் இன்று திருமணம் செய்து கொண்டோம்.

பிர்மின்ஹாமில் எங்கள் குடும்பத்தினர் சூழ எங்கள் திருமணம் எளிய முறையில் நடந்தது. உங்களது ஆசியும் வாழ்த்துகளும் தேவை. வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்கப் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here