சீறிப் பாய்கின்றன மலையக நீர்வீழ்ச்சிகள் பொதுப்பொழிவு பெற்றுள்ளன.

0
208

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றன. நீர் போசன பிரதேசங்களுக்கு பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக மத்திய மலைநாட்டில் உள்ள நீர் வீழ்ச்சிகள் சீறிப்பாய்கின்றன.

அதிக மழை காரணமாக லக்ஸபான, எபடீன், மரே, காட்மோர், மோஹினி எல்ல, டெவோன், சென் கிளையார் உள்ளிட்ட பிரதான நீர் வீழ்ச்சிகள் பொதுப்பொழிவு பெற்றுள்ளன.

இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற பெரிய சிறிய சகல நீர் வீழ்ச்சிகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன. ஆகவே இந்த நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர் வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதனை தவிர்க்குமாறும் பாதுகாப்பு பிரிவினர் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here