கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக எஸ்.பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ராவிற்கு பத்ம விபூஷண் விருது.

0
207

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவர் சார்பில் அவரது வாரிசான எஸ்.பி.பி சரண் பெற்றுக்கொண்டார்.

தமிழ் திரை இசை உலகில் பின்னணி பாடகராக அறிமுகமாகி தன் இனிய குரல் வளத்தால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஏறத்தாழ 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

‘பாடும் நிலா’ என இரசிகர்களால் அன்புடன் போற்றப்பட்ட இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதியன்று இரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு மறைந்தார்.

இவரது கலைச்சேவையை பாராட்டி இந்திய அரசு உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவித்தது.

இதனைத்தொடர்ந்து புதுடில்லியில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கினார்.

இந்த விருதை அவருடைய வாரிசும், பின்னணி பாடகரும், தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பி.சரண் பெற்றுக்கொண்டார்.

இது இன்றும் தன்னுடைய காந்தக் குரலால் எம்மிடையே காற்றாக ஒலித்துக்கொண்டிருக்கும் எஸ்.பி.பி.க்கு கிடைத்த அஞ்சலியாகவே இரசிகர்கள் கருதுகிறார்கள்.

இதனிடையே கலைத்துறையில் சேவையாற்றியதற்காக பின்னணி பாடகி சித்ராவிற்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பாடகி சித்ரா அந்த விருதைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here