மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் மாவனெல்ல மற்றும் கடுகண்ணாவ வுக்கு இடையிலான பகுதி மேலும் மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியா பிரதேசத்தை அனர்த்தமற்ற சுற்றுலா வலயமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.