பிரதேச சபைச் சட்டத்திருத்ததை நடைமுறைப்படுத்த தெரியாத வரவு செலவுத் திட்டம் யாருக்கு ?

0
209

1987 ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டப் பின்னரும் கூட அதனை உரிய முறையில் நடைமுறைக்கு கொண்டு வரத் தெரியாத பிரதேச சபை வரவு செலுவத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பயன் என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மஸ்கெலிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு எதிராக வாக்களிப்பதற்கான காரணத்தை விளக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

1987 ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பிரதேச சபைகளினுடாக தோட்டப் பகுதிகளுக்கு சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. 2018 ஆண்டு 30வது சரத்தில் திருத்தப்பட்டதாக அறிவித்து வர்த்தமாணி செய்யட்டது.இந்த சட்டதிருத்தத்தினுடாக.பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாவிட்டாலும்.தோட்ட புறங்களுக்கு. பிரதேச சபை சேவைகளை முன்னெடுக்க கூடிய நிலை காணப்பட்டது. அதே ஆண்டு தாபிக்கப்பட்ட புதிய பிரதேச சபையாக மஸ்கெலிய, நோர்வூட், அக்கரப்பத்தனை , கொட்டகலை பிரதேச சபைகள் அமையப் பெற்றன. இவை நான்கும் பிரதானமாக தோட்டப்பகுதியை சேவைப் பிரதேசமாக க் கொண்டு இருப்பதுடன், அதன் ஆளம் தரப்பாக மலையகத் தமிழ் அரசியல் தரப்புகள் அமைவதுடன் அதன் தவிசாளர்களாகவும் உள்ளனர்.

அவர்கள் அந்த சபைகளில் தலைவர்களாகவும்.முகவர்களாகவும் இருந்து அரசியலில் தமக்கான முகவரியை தேடிகொண்டார்களே தவிர சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி தோட்டப் பகுதிகளுக்கு சேவையாற்றி காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எம்மவர்கள் தவிசாளர்களாக உள்ள இந்த சபைத் தவிசாளர்களாலும் ஆளம் தரப்புகளாலும் இந்தச் சட்டத்திருத்த நடைமுறையை செயற்படுத்திக் காட்ட முடியவில்லையாயின் வேறு தரப்பு தலைமை வகிக்கும் ஆட்சி பீடத்தில் இருக்கும் அம்பகமுவை, நுவரெலிய, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கத்தை பிரதேச சபைகளிடம் நாம் எப்படி நமது உரிமையை நடைமுறைப் படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியும்.

எனவே தோட்டப்பகுதிக்கு சேவையாற்றத் துணிவு இல்லாத சபைகளின் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து அது வெற்றி பெறுமானால் அதன் சேவைகள் யாருக்கு சென்றடையும் என கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது.

எனவே கையலாகாத தவிசாளர்களின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதுடன் பிரதேச சபைச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரக் கோரி தோட்டப்பகுதகளை உள்ளடங்கக் கூடிய சகல மாவட்ட பிரதேச சபைகளிலும் இந்தக் காரணத்தை முன்வைத்து வரவு செலுவத் திட்டங்களை எதிர்த்து வாக்களிப்பதுடன் சபைகளில் இருந்து வெளிநடப்பு செய்து கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்க மலையகத் தோட்டப்பகுதியில் அபிவிரத்தியில் அக்கறைகொண்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here