இன்று காலையில் கொழும்பில் கட்டடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம்.

0
201

கொழும்பு – கறுவாத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று(20) காலை வெடிப்பு சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

Copied Hiru 

பழைய குதிரை பந்தய திடலின் பார்வையாளர் அரங்கின், கீழ் தளத்தில் அமைந்துள்ள  சர்வதேச உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான உணவு விடுதியில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Copied Hiru 
எனினும் வெடிப்பு சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவினரும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது தீக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Copied Hiru 

இச்சம்பவத்தினால் எவருக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லையெனக் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here