இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் பதுளையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ நிமல் லான்சா அவர்களுக்கும் செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்க்கலந்துரையாடலில் பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.