கிண்ணியா படகு விபத்து எதிரொலி…….! பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்.

0
192

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலால் குறித்த வீடு மற்றும் வீட்டின் நுழைவாயில் என்பன கடுமையாக சேதமடைந்துள்ளன.

குறிஞ்சாக்கேணியில் பாலம் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், இன்று காலை மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் மூழ்கியதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் நான்கு பேருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நன்றி சூரியன் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here