எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.

எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிக கொண்டது. இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது.எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது. மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.

தலைமுடி மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல், உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது.

ஆஸ்துமாவாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.

எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது. இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.