ஹட்டன் பகுதியில் வங்கிகளிலுள்ள தன்னியக்க இயத்திரத்தின் மூலம் பல லட்சம் ரூபா கொள்ளை.

ஹட்டன் பகுதியில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள காசு பெறும் தன்னியக்க இயந்திரங்கள் மூலம் பல லட்சம் ரூபாய்களை கொள்ளையிடும் கும்பல் ஒன்று தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கொள்ளை கும்பல் நீண்ட காலமாக மிகவும் சூக்சுமமான முறையில் இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாத மற்றும் பணம் எடுக்க தடுமாறும் நபர்களை இலக்காக கொண்டே குறித்த கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இப்பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரச வங்கிகளில் பல லட்சம் ரூபாய்க்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவு முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவுது குறித்த கொள்ளை கும்பல் வங்கியின் தன்னியக்க இயந்திரங்களில் காசு பெறுவதற்காக வருவதை போன்று நின்று கொண்டிருந்து அதனை தொடர்ந்து தன்னியக்க இயந்திரங்களில் காசு எடுக்க தெரியாதவர்கள் இவர்களிடம் காசு எடுத்து தருமாறு கூறும் போது இலத்திரனியல் அட்டையினை போட்டுவிட்டு அதனை தொடர்;ந்து தன்னிடமுள்ள செல்லபடியற்ற மற்றும் களவாடிய காசில்ல இலத்திரனியல் அட்டைகளை மாற்றி கொடுத்துவிட்டு பின்னர் வேறு வங்கிக்கு சென்று உரிய நபரின் கணக்கில் உள்ள பணத்தினை திருடிவருவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்து ஒரு சிலர் மாத்திரம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் வெட்கம் மற்றும் தங்களுடைய தவறு காரணமாக முறைபாடுகள் செய்திருக்கினறனர் என்றும் தெரிய வருகிறது.

இது குறித்து ஹட்டன் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்றைய தினமும் இரு வங்கிகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்

எனக்கு இந்த இலத்திரனியல் அட்டையில் பணம் பெற தெரியாது அதனால் நான் யாரிடமாவுது கொடுத்து தான் எடுப்பேன் அப்போது எனக்கு ஒரு சிலர் எடுத்து தருவார்கள். அதே போன்று தான் நேற்றைய தினமும் காசு பெறும் அட்டையினை அங்கு நின்றுகொண்டிருந்தவரிடம் கொடுத்தேன் பின்னர். அவர் போட்டு பார்த்துவிட்டு என்னிடம் காசு இல்லை என்று குறித்த காசுபெறும் இலத்திரனியல் அட்டையினை கொடுத்தார்.

பின்னர் கூட்டம் அதிகமாக இருப்பதால் நான் கூட்டம் குறைந்தவுடன் போய் வங்கியில் விசாரித்த போது தான் எனக்கு தெரிந்தது அவர் தந்தது எனது அட்டையல்ல அதே போன்று அது வேறுவொரு போலியான அட்டை என அவரை பார்;ப்பதற்கு காசு எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தவர் போல் இருந்தாகவும்,குறித்த நபர் எனது கணக்கிலிருந்து 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபா எடுத்து சென்றுள்ளதாகவும் இது குறித்த பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் தான் மிகவும் கஸ்ட்டத்திற்கு மத்தியில் சிறுக சிறுக சேமித்த காசினை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த கொள்ளை கும்பலை பிடித்து தனது காசினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பொது மக்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத எவரிடமும் தங்களது அட்டைகளை கொடுக்க வேண்டாம் எனவும் இவ்வாறு நபர்கள் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் மிகவும் கவனமாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறான கொள்ளை கும்பல் நாட்டில் பல பகுதிகளிலும் தன்னியக்க இயந்திரங்களின் மூலமும் ஈசிகேஸ் என்ற போர்வையிலும் திருடி வருவதனால் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வங்கி முகாமையாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
ஹட்டனில் கையகப்படுத்திக்கொண்ட இலத்திரனியல் அட்டைகள் மூலம் நாட்டின் தூர உள்ள மாவட்டங்களில் உள்ள தன்னியக்க இயந்திரங்களில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் எனவே பொதுவாக எல்லா மாவட்டங்களிம் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வங்கி முகாமையாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்.