பங்காளி கட்சிகள் அரசாங்கத்தை விமர்சித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்

அரசாங்கத்துடன் இணைந்துள்ள பங்காளி கட்சிகள் அரசாங்கத்தை விமர்சித்து மக்களையும் அக்கட்சிகளின் ஆதரவாளர்களையும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஏமாற்றுகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேசசபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் குற்றம் சுமத்துகிறார்.
இன்று (24) ஹட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …
அரசாங்கத்துடன் இணைந்துள்ள விமல்வீரவன்ச தலைமையிலானகட்சியும் சரி,கம்பில தலைமையிலான கட்சியின் டி.யு.குணசேகரவின் தலைமையிலான கட்சியும் சரி அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் சரி வாசுதேவ நாணக்காரவின் கட்சியாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவரும் அரசாங்கத்தினை பலவாறு விமர்சித்துவிட்டு அரசாங்கத்தை விட்டு வில போகிறோம்.அமைச்சுப்பதவிகளை துறக்கப்போகிறோம் என்றெல்லாம் கூறி விட்டு கட்சி அங்கத்தவர்கள் மத்தியிலும் அமைப்பாளர்கள் மத்;தியிலும் பல்வேறு மாற்றுக்கருத்துக்களை கூறி ஒரு மாயயை உருவாக்கி அரசாங்த்தில் ஒரு மாற்றம் இடம்பெற போகிறது என்று எல்லோரும் நினைக்கின்ற அளவு செயப்பட்டு விட்டு இந்த வரவு செலவுத்திட்டத்தில் மௌனிகளாக இருந்து விட்டு அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருப்பதன் மூலம் ஏதாவது ஒரு டீல் இடம்பெற்றுள்ளதா? என ஒரு சந்தேகம் எழும்புகிறது இன்றைய காலகட்டத்தில் ஒரு தனித்துவமான ஆட்சி இடம்பெற்றுயிருக்கின்ற போது.மக்களின் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்வதில் ஒரு சிக்கல் நிலைமை இருக்கின்றது. இப்போது விலைவாசி அதிகரிப்பின் காரணமாக மக்கள் மத்தியில் நேர்த்தியான ஆட்சி ஒன்றினை கொண்டுவர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.

இதே போன்று ரவுப்அக்கீம் தலைமை வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ்,சீசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்கள் இப்போது பாராளுடன்றத்திலே வெகுவாக அரசாங்திற்கு எதிரான கருத்துக்களை பலமான முறையில் தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் வாக்களிப்பின் போது ஒரு சிலர் பராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை. அதே கட்சியினை சேர்ந்த ஒரு சிலர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.ஆகவே இந்த அரசாங்கத்தில் டீல் வைத்து செயப்படுகிறார்கள்.

என்றே எண்ணத்தோன்றுகிறது.தலைமைகள் மக்களுக்கு வேரொரு முகத்தை காட்டுவதற்காக அவர்களை விமர்சிக்கிறார்கள் மறு பக்கம் பின் வாசல் வழியாக அவர்களின் தூதர்களை அனுப்பி டில் வைத்திருக்கும் நிலையே எங்களால் காணக்கூடியதாக உள்ளது.இவ்வாறான ஒரு நிலை தொடர்ந்தால் இந்த ஆட்சியினை நேர்த்தியான ஆட்சியாக எவ்வாறு கொண்டு நடத்து முடியும் என்பதில் பாரிய சிக்கல் ஏற்படுகிறது.இதே போன்று சஜித் பிரமதாச தலைமையிலான எதிர்கட்சியினர் பாரிய ஆர்ப்பாட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு ஆர்ப்பாட்டங்களின் போது அவர்கள் தெரிவிக்கின்ற கருத்து அரசாங்கத்திலிருந்து 25 பேர் வரப்போகின்றார்கள் 30 பேர் வரப்போகின்றார்கள் அமைச்சர்கள் வரப்போகின்றார்கள் என்ற இது ஒரு வேடிக்கையான விடயம் நேரடியாக சொல்கிறேன் சஜீத்பிரமதாச அவர்களும் அரசாங்கத்தின் டீல் காரர்.அரசாங்கத்திற்கு எதிராக செயப்படுகிறோம் என்று காட்டி ஒரு பக்கம் தனது வாக்குகளை அதிகரித்து கொண்டு அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை மறுபக்கம் பெற்றுவருகிறார்கள்.|ஆகவே அரசாங்கத்தின் உள்ளும் பாராளுமன்றத்திலும் டீல் காரர்கள் காணப்படுவதனால் ஒரு நேர்த்தியான அரசாங்கத்தினை உருவாக்க முடியாத ஒரு நிலை காணப்படுவதாகவும் ஆகவே எதிர்வரும் காலங்களில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

 

கே.சுந்தரலிங்கம்