இ.தொ.கா மற்றும் ர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்திற்கும் இடையே சந்திப்பு.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் சர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்திற்கும் (Public Service International) இடையேயான சந்திப்பு இன்று கட்சியின் தலைமை காரியாலயம் ஆன சௌமிய பவானில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இளம் தொழிலாளர் தலைமைகளை உருவாக்குதல், தொழிற்சங்க ரீதியான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான சர்வதேச உதவிகள், பயிற்சிப்பட்டறைகள், மற்றும் சர்வதேச ரீதியிலான தொழிற்சங்க அங்கீகாரங்கள் தொடர்பாக தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் எண்ணக் கருவில் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக செயலாளர் விஜயலக்ஷ்மி தொண்டமான் பிரதித்தலைவர் அனுஷியா சிவராஜா உபதலைவர் சிவராஜா சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும் உப செயலாளருமான பாரத் அருள்சாமி தொழிலாளர்களுக்குப் பொறுப்பான திரு ராஜமணி அவர்களும் பப்ளிக் சேர்வீசஸ் இன்டர்நேஷனல் தென் ஆசிய நாடுகளுக்கான தலைவர் திரு ராமன் கண்ணன் அவர்களும் பிராந்திய செயலாளர் கலாநிதி கோட்சன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

க.கிஷாந்தன்